Towards a just, equitable, humane and sustainable society

விதவிதமான போக்குவரத்துகள்


பல்வேறுபட்ட நில அமைப்புகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு போக்குவரத்து பற்றி மாணவர்களுக்கு செயல்பாடுகள் மூலம் தெரிந்துகொள்ள வைத்தால் 

பாட நோக்கம்

  • மாணவர்களுக்கு வெவ்வேறு வகையான போக்குவரத்து பற்றி அறியச்செய்தல்
  • பல்வேறுபட்ட போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் நில அமைப்புகள் பற்றி அறிதல்
  • பல்வேறு விதமான மொழிகள், உடைகள் பற்றிப் புரிந்து கொள்ளுதல்

ஈடுபடுதல்

மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் வான் வழி, நீர் வழி, தரை வழி போக்குவரத்து எனப் பெயரிட்டேன். அனைத்து போக்குவரத்துச் சாதனங்களும் அடங்கிய நெகிழிப் பொம்மைகளிலிருந்து அவரவர்க்குரிய வாகனங்களைப் பிரித்தெடுக்க வேண்டும். முதலில் எடுக்கும் குழுவினர் வெற்றி பெற்ற குழுவாக அறிவிக்கப்படும் என்றேன். அவ்வாறே அனைத்துக் குழந்தைகளும் மிகவும் ஆர்வமுடனும் மகிழ்ச்சியுடனும் பங்கேற்றனர். ‘வான்வழி’ குழு வெற்றி பெற்றது.

விளக்குதல்

மாணவர்களுக்கு இப்பாடம் தொடர்பான காணொளியைக் காட்டினேன். காணொளியில் தொடர்வண்டி பல்வேற்பட்ட நிலப்பகுதியில் செல்வது போன்ற படங்கள் காண்பிக்கப்பட்டன. பிறகு அது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன,

  • நீங்களும் இதுபோல் தொடர்வண்டியில் பயணம் செய்துள்ளீர்களா என்று கேட்டதற்கு மூன்று மாணவர்கள் மட்டும் சென்றுள்ளோம் என்று பதிலளித்தனர்.
  • எங்கே சென்றுள்ளீர்கள் என்றதற்கு இருவர் மட்டும் திருப்பதிக்கு என்றனர். ஒரு மாணவன் மட்டும் டெல்லிக்கு என்று கூறினான்.
  • காணொளியில் பார்த்த தொடர்வண்டி எங்கேயெல்லாம் சென்றது என்றதற்கு ஆத்து பாலம், குகை, பாலம் என்று கூறினார்கள்
  • நிலப்பகுதியில் என்னவெல்லாம் பார்த்தீர்கள் என்ற கேள்விக்கு மலை, நீர், மரம், மண் என்று கூறினார்கள்

இவ்வாறு பல்வேறு விதமான வினாக்களுக்கு அனைவரும் விடை கூறினர்.

மாணவர்கள் அனைவருக்கும் தொடர்வண்டி பயணச்சீட்டை காட்டினேன்.

மாணவர்கள் அனைவரும் தொடர்வண்டி செல்வது போலவும் அதில் நிகழும் நிகழ்வுகள் போலவும் ஒரு உண்மை நிகழ்வுபோலவே நடித்து மகிழ்ந்தனர்.

பரிசோதகராகப் பயணசீட்டைச் சரிபார்த்தல் 

மாணவர்கள் அனைவரும் ஆட்டோவில் செல்லும் முன் ஓட்டுனரிடம் எப்படி, என்னவெல்லாம் கேட்பார்கள் என்றும், எப்படி அமர்வார்கள், அது எப்படி சத்தம் எழுப்பிச் செல்லும் என்றும் நாடகமாக நடித்துக் காட்டினர்.

பல்வேறு மாநிலங்களில் பேசப்படும் மொழிகளைப் பற்றியும் ஆடைகளைப் பற்றியும் உணவுப்பழக்கத்தைப் பற்றியும் காணொளி மூலம் பார்த்துத் தெரிந்து கொண்டனர். பிறகு மாறுவேடம் போட்டி நடத்தினேன்.

விரிவாக்குதல்

மாணவர்களிடம் பணித்தாள்களைக் கொடுத்து தொடர்வண்டி எம்மாதிரியான நில அமைப்புகளிலெல்லாம் சென்றதோ அவற்றைப் பற்றிப் படம் வரைந்து வண்ணமிட்டு அது தொடர்பான 5 வரிகளை எழுதச்செய்தேன். அனைவரும் வெவ்வேறு மாதிரியான படங்களை, அதாவது தொடர்வண்டி பாலத்தின் மேல் செல்வது போலவும், அடியில் நீர் இருப்பது போலவும், அதில் படகுகள், கப்பல் செல்வது போலவும் வரைந்து காட்டினர்.   

நீரில் பயணம் செய்யும் போது கரையில் தென்னை மரங்கள் வரிசையாக இருப்பது, குளிப்பது, துணிதுவைப்பது மற்றும் மீன் பிடிப்பது போன்ற இயற்கைக் காட்சிகளையும் வரைந்து அழகாக வண்ணமிட்டுக் காட்டினர்.

உலக உருண்டை மாதிரி மற்றும் வரைபடத்தைக் கொண்டு தொடர்வண்டி சென்ற இடங்களை மனதில் பதியச் செய்த பிறகு இந்திய வரைபட நகல்களைக் கொடுத்து இவ்விடங்களைக் குறித்துக் காட்டி வண்ணமிடச் செய்தேன். ஒருவன் தவிர மற்ற அனைவரும் சரியாகக் குறித்துக் காட்டினர்.

மதிப்பீடு

ஒருசில மாணவருக்கு முழுமையாகப் புரியவில்லை என்பதை அவர்களது பதில்களை வைத்து உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு மட்டும் புரியச் செய்ய இரண்டு, மூன்று நாட்கள் ஆனது.

தீப்பெட்டி, பாட்டில் மூடிகள், பசை, குச்சி ஆகியவற்றைக் கொண்டு தொடர்வண்டி மாதிரி ஒன்றை உருவாக்கினோம்.

ஆசிரியர்: நம்பிக்கை மேரி, அ.தொ.ப தவளக்குப்பம்

Grade: 
4

Subject: 
EVS

Term: Term 1