Towards a just, equitable, humane and sustainable society

வாசித்தலில் வித்தியாசம்

0
No votes yet
0
Post a comment

மாணவர்களிடம் அவர்களுக்கு தெரிந்த பொருட்களின் பெயர்களை கூறச்செய்து அவற்றை படமாக வரைந்து வண்ணமிடச் செய்தேன். சில படங்களை பழைய தாள்களிலிருந்து வெட்டி ஓட்டச் செய்தேன். பிறகு படங்களுக்குறிய ஒரு சில வாக்கியங்களை எழுதச் செய்து அனைத்து அட்டைகளையும்் ஒன்றாக இணைத்து அனைவரையும் வட்டமாக அமரச்செய்து படிக்கச் செய்தேன். ஆசிரியர் எழுதிய குறிப்பேட்டை பார்த்து மாணவர்கள் எழுதினர்.

இவ்வாறு கற்றல் கற்பித்தல் நடைபெற்றதால் தெரிந்தவற்றை வரைந்து வண்ணமிடவும், அவற்றைப் பற்றிய தங்களின் கருத்துக்களை எழுதியும் படித்தும் மகிழ்ந்ததால் கற்றல் சுமையாக இல்லாமல் சுகமான நிகழ்வாக இருந்தது.

மாணவர்களிடம், வாங்கியச் சொற்கள் அடங்கிய வார்த்தை அட்டைகளைக் கொடுத்து குழுவாக அமர்ந்து சரியான வாக்கியத்தை அமைத்து படிக்கச் சொன்னேன். அனைத்து மாணவர்களும் ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வாக்கியத்தை அமைத்து படித்து மகிழ்ந்தனர். அட்டைகள் வண்ணமிகுந்து காணப்பட்டதால் சொற்களுக்கு முக்கியத்துவம் குடுக்காமல் வணணங்களை வைத்து அடுக்கினர். பிறகு அட்டையிலுள்ள சொற்களை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சொற்களை மாற்றி அமைத்து படித்தனர். இதனால் வாசித்தல் பயிற்சி மிகவும் எளிமையாக நிகழ்ந்தது.

மாணவர்களுக்கு உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துகளை கற்பிப்பதில் உள்ள கடினத்தன்மையை போக்க பாடல் மூலமாகவும், விளையாட்டு முறையிலும் கற்றல் கற்பித்தல் எளிதாக நிகழ்ந்தது. பிறகு ‘க’ முதல் ‘கௌ’ வரை உள்ள எழுத்துக்களுக்கு உரிய சொற்களை மாணவர்களை கூறச் செய்தேன். அவர்கள் சுற்றுபுறத்திலிருந்து தெரிந்த சொற்களை ஆர்வமுடன் கூறி மகிழ்ந்தனர். பிறகு ‘ச’ வரிசை சொற்களை தேர்ந்தெடுத்து அவ்வரிசைக்குரிய பொருட்களை சேகரித்து ஒரு கண்காட்சி அமைத்து மாணவர்களை காணச் செய்ததால் கற்றல் உயிரோட்டமாக நிகழ்ந்தது. கண்காட்சியில்  அனைத்து எழுத்துகளுக்கும் மாணவர்கள் தாமாகவே முயற்சி செய்து தங்கள் சூழலிலிருந்தும், தெரிந்தவற்றிலிருந்தும், அவர்களுக்கு தெரிந்த சொற்களை வரிசைபடுத்திக் கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து மற்ற  எழுத்து வரிசைகளுக்குரிய பொருட்களையும் சேகரித்து மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக கண்காட்சி அமைத்து மகிழ்ந்தனர்.

இவ்வாறு மாணவர்விரும்பும் வண்ணம் அவர்களை ஈடுபடுத்தி  கற்றல் கற்பித்தல் நிகழ்ந்ததால் எளிமையானதாகவும், இனிமையானதாகவும், உயிரோட்டமுள்ளதாகவும் கற்றல் சூழல் அமைந்தது.

    

Grade: 
3

Subject: 
Tamil

Term: Term 1

0
No votes yet
0
Post a comment