Towards a just, equitable, humane and sustainable society

நடித்து கற்றோம்

0
No votes yet
0
Post a comment

பாடப்பொருள் சிரமமின்றி மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்றால் அவர்களை வைத்து ஒரு Role Play பண்ணலாம் என முடிவு செய்தேன்.

Role play – க்கு தேவையான பொருட்களை வகுப்பறையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்திச் செய்து கொண்டேன். chart, waste invitation cards, straw, sticks, saree box போன்றவற்றை வைத்து முகமூடிகள் உருவாக்கினோம்.

Role play செய்வதற்கு முன் அவர்களிடம் சிறிது நேரம் உரையாடி அவர்களை ஆயத்த படுத்தினேன். ஆர்வமாய் பதில் கூறிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கதாபாத்திரத்தை வழங்கினேன்.  கதாபாத்திரம் வெறும் 3 பன்றிகள் மற்றும் 1 ஓநாய் தான். எனவே மீதம் உள்ள மாணவர்களைத் துணை கதாபாத்திரரங்களாக வைத்துக் கொண்டேன்.

ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் என்பதால் அவர்கள் நிலைக்கு ஏற்ற ஓரிரு வாக்கியங்களில் மாணவர்களைப் பேச பயிற்சி அளித்தேன்.

Eg:

what is your name?

My name is Raju.

Now, you are Sonu. What is your name now?

My name is Sonu.

Where do you live?

I live in Straw house

இறுதியாக, கதையின் தலைப்பை ஒரு மாணவி கூறினாள்.

பின்பு மூன்று பன்றிகளும் தம் பெயரையும் தாம் வசிக்கும் வீட்டின் பெயரையும் கூறுவார்கள். முகமூடிகளை மாட்டிகொண்டு, இடையிடையே ஓநாய் என்ன செய்ய போகிறது என்று கூற மூன்று மாணவர்கள் இருந்தனர்.                                              

காலைப் பேரவையில் மற்ற மாணவர்கள் முன் இந்த Role play வைச் செய்ய வைத்த போது அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.

அதன் பிறகு என் மாணவர்கள் அனைவரும் அதை ஒரு கதை போலவே தங்களுக்குள் கூறிக்கொண்டு விளையாட ஆரம்பித்து விட்டனர்.

இச்செயல்பாடு மூலம் மாணவர்களிடம் மிகத் தெளிவாகக் கதையைப் புரிய வைக்க முடிந்தது. மேலும் பயம் மற்றும் தயக்கமின்றி ஆங்கிலத்தில் உரையாட  ஓர் ஆரம்பமாய் அமைந்தது.

    

Grade: 
1

Subject: 
English

Term: Term 1

0
No votes yet
0
Post a comment