Towards a just, equitable, humane and sustainable society

தண்ணீரின் பண்புகளை அறிதல்


ஆராய்ந்து...

செய்து கற்றோம், அறிவியல்

கற்றலில் தெளிவு பெற்றோம்”

திறன்

பொதுவாக அறிவியலைப் பொருத்தமட்டில் சோதனைகளை ஆராய்ந்து, செய்து கற்கும் போது மாணவர்கட்கு தெளிவு கிடைக்கிறது. அத்தெளிவு எந்தக் காலத்திலும் சந்தேகத்தை எழுப்புவதில்லை.

  • நீரில் மூழ்கும் பொருட்கள், மிதக்கும் பொருட்கள் பற்றி அறிதல்
  • நீரில் கரையும்- கரையாப் பொருட்கள் பற்றி அறிதல்.

ஈடுபடுதல்

மாணவர்களிடையே சில வினாக்களை வினவினேன். காணொளியில் எண்ணெய்யில் இடப்பட்ட பூரி மாவானது முதலில் ஏன் மூழ்குகிறது, பின்பு ஏன் மிதக்கிறது என்று கேட்டேன்.

மாணவர்கள், எண்ணெய்யில் இடப்பட்ட பூரி முதலில் கனமாக இருப்பதால் மூழ்குவதாகவும், மேலே வரும்போது எடைக் குறைவாக இருப்பதால் மிதப்பதாகவும் பதில் அளித்தனர்.

ஆராய்தல்

மாணவர்களை வட்டமாக அமரவைத்தேன். அவர்கள் நடுவே தண்ணீர் நிரம்பிய வாலி வைத்தேன். பிறகு ஒவ்வொரு மாணவர்களிடமும் சில பொருட்கள் தரப்பட்டன (பென்சில், மரக்கட்டை, இலை, கல், மண், பேனா....).

மாணவர்களின் பங்கேற்பு: மாணவர்கள் ஒவ்வொன்றாகத் தண்ணீரில் போட்டு ஆராய்ந்து கற்றுக் கொண்ட ஆர்வம் அற்புதம். அதில் கீழ்க்கண்ட வினாக்களை அவர்களின் வாயினின்றே பெற கிளர் வினாக்களைக் கேட்டேன். சரியான விடை கிடைத்ததில் மகிழ்ச்சி.

ஏன் பொருட்கள் மிதக்கின்றன? ஏன் மூழ்குகின்றன? – அதற்கு அவர்களே எடை குறைவுள்ள பொருட்கள் மிதப்பதாகவும், அதிகம் உள்ளது மூழ்குவதாகவும் விளக்கினர்.

விளக்குதல்

மாணவர்களிடம் சில கரையும், கரையாப் பொருட்கள் தரப்பட்டது. மாணவர்களை மூன்று குழுவாக பிரித்து பின்வரும் பொருட்கள் கொடுக்கப்பட்டன – காபி பொடி, சர்க்கரை, மைதா, உப்பு, மண், பால், எண்ணெய், தேன்.

சில பொருட்களை நீரில் கரைத்துப் பார்த்தல்

நீர் அடர்திக்கான சோதனை

மாணவர்களின் பங்கேற்பு: அவர்கள் யூகித்து பின்பு ஆராய்ந்து கீழ்க்கண்ட அட்டவணையைத் தயாரித்தனர்.

இவ்வாறு சில கரையும் மற்றும் கரையாப் பொருட்களை இனங்கண்டு கொண்டனர். வீட்டிற்குச் சென்று தாமே வேறு சில பொருட்களை வைத்துச் செய்து பார்ப்பதாகவும் ஆர்வமுடன் கூறினர்.

விரிவாக்குதல்

மாணவர்களிடையே எலுமிச்சம் பழம் சாதாரண நீரில் மூழ்குவதற்கும் உப்பு கரைசலில் மிதப்பதற்கும் காரணத்தை வினவ, பதிலளிக்கச் சற்று தயங்கினர். அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களிடையே சமநிலையில் வைக்கப்பட்ட ஒரு தட்டின் மேல் எண்ணெய், சாதாரண நீர், சர்க்கரை ஒரு துளி வைக்கப்பட்டது. பின்பு சிறிது சாய்த்து பார்த்து மாணவர்கள் எண்ணெய் முதலில் வருவதாகவும், பின்பு நீர், அதன் பின் சர்க்கரை வருவதாகவும், அதற்கு எண்ணைய்க்கு நழுவும் தன்மை இருப்பதாகவும் அவர்களின் பாணியில் கூறினர்.

மதிப்பிடல்

மாணவர்களிடம் அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களில் கரையும் கரையா பொருட்கள், மூழ்கும் மிதக்கும் பொருட்களை இனங்கண்டு ஆராய்ந்து அட்டவணை தயாரிக்கப் பணித்தேன்.

இவ்வகையான சோதனைகளுக்குப் பிறகு அனுபவங்களைப் பார்த்த பின், அனைத்து மாணவர்களின் மனதிலும் இத்தகைய புரிதல் இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

பொருட்கள் எல்லாம் பலவிதங்கள்

சில பொருட்கள் நீரில் மூழ்குகின்றன

சில பொருட்கள் நீரில் மிதக்கின்றன

மரக்கட்டைகள் மிதக்கின்றன,

மண்ணும் கல்லும் மூழ்குகின்றன

ஏன் என்று நானும் யோசித்தேனே

விடையும் எனக்கு கிடைத்தனவே

நீரின் தன்மை பொருத்து

மூழ்கி மிதக்கின்றனவே

எனக்கும் தெளிவு கிடைத்ததுவே

கற்றலில் மகிழ்ச்சியை உணர்ந்தேனே!

Teacher: Leena, GPS Thavalakuppam / லீனா, அ.தொ.ப தவளகுப்பம்

Grade: 
4
5

Subject: 
EVS

Term: Term 1