Towards a just, equitable, humane and sustainable society

கௌதாரியும் முயலும்

0
No votes yet
0
Post a comment

(கதையை நாடகமாக்கல்)

 

நோக்கம்

• கதையைப் புரிந்து கொள்ளுதல்.

• கற்பனைத் திறனை வளர்த்தெடுத்தல்.

• பேச்சுத்திறனை வளர்த்தெடுத்தல்.

• குழுவாக இணைந்து செயலாற்றும் பண்பை வளர்த்தெடுத்தல்.

ஆயத்தப்படுத்துதல்

அன்றாட வாழ்வில் மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் பற்றியதான கலந்துரையாடலை நிகழ்த்தலாம். இத்தகைய பிரச்சனையான சூழ்நிலைகளில் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்வர், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதான விவாதங்களையும் மையமிட்டதாய் இந்தக் கலந்துரையாடல் அமையலாம். உதாரணமாக, கீழ்க்கண்ட மாதிரியான வினாக்களை எழுப்பலாம்.

• உனக்கும் உன் நண்பனுக்கும் சண்டை வருமா? ஏன்?

• சண்டை வந்தால் என்ன செய்வாய்? எப்படி சண்டையைத் தீர்த்துக்கொள்வீர்கள்?

• உங்கள் சண்டையை யார் சமாதானம் செய்வார்கள்?

செயல்பாடு - 1

கௌதாரியும் முயலும் என்ற இந்தக் கதையை மாணவர்களுக்குப் புரியும் வகையில் ஆசிரியர் விளக்கிக்கூற வேண்டும். மாணவர்களுக்குக் கதையின் சாராம்சத்தைக் கொண்டு சேர்க்கும் வகையிலும், மாணவர்கள் ஆர்வத்துடன் கதையைக் கேட்கும் வகையிலும் கதை கூறும் முறை அமையலாம் (கதையில் வரும் பறவைகள், விலங்குகள் போன்ற- வற்றின் படங்களை மாணவர்களிடம் காண்பித்தும், பொம்மலாட்டம் மூலமாகவும் அல்லது வேறு முறையிலும் கதையை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்). மாணவர்களிடம் கதையின் சாராம்சம் சென்றடைந்துள்ளதா? என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

• மாணவர்களிடம் கதாப்பாத்திரங்கள்பற்றி வினா எழுப்புதல்

• கதையின் நிகழ்வுகள் தொடர்பாகவும் வினா எழுப்புதல்

மாணவர்கள் கூறும் விடைகளின் அடிப்படையில் கதையின் சாராம்சம் மாணவர்களிடம் சென்றடைந்துள்ளது என்பதை அறிந்து கொண்ட பின்பு கதையை நாடகமாக்கும் செயல்பாட்டை மாணவர்களின் ஒத்துழைப்புடன் தொடங்கலாம். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாணவர்களை இரண்டு அல்லது மூன்று குழுக்- களாகப் பிரித்து நாடகமாக்கல் செயல்பாட்டை மேற்கொள்ளலாம். ஒரே நேரத்தில் மாணவர்களின் மூன்று குழுக்களையும் ஆசிரியர் வழி நடத்து- வதற்கு ஏற்ப ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியான செயல்பாடுகளை ஒதுக்கி மாணவர்களை ஈடுபடச்- செய்யலாம்.(உதாரணமாக, ஒரு குழுவிடம் ஆசிரியர் கலந்துரையாடும் போது, மற்ற குழுக்களை முகமூடி செய்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம்.)

செயல்பாடு - 2

நாடகமாக்கல் செயல்பாட்டின் தொடக்க நிலையில், மாணவர்களிடம், தாங்கள் நடிக்க விரும்புகிற கதாப்பாத்திரங்களைப் பற்றியும், அக்கதாப்பாத்திரங்கள் நாடகத்தில் எத்தகைய உரையாடலைப்பேசுவது என்பதைப்பற்றியும் வினாக்களை எழுப்பலாம் (இந்தச் செயல்பாடுகளில் ஆசிரியரின் தலையீடு குறைவாகவும் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாகவும் இருக்க வேண்டும்). உதாரணமாகக் கீழ்க்கண்ட மாதிரியான வினாக்களை எழுப்பலாம்.

• தாங்கள் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?

• உங்களுடைய கதாப்பாத்திரம் என்ன உரையாடலைப் பேசும்?

மாணவர்கள், கதாப்பாத்திரங்களுடைய தன்மையை உணர்ந்து கொள்ளும் திறனையும் கதாப்பாத்திரத்- திற்கு ஏற்ற உரையாடலைப் பேசும் திறனையும் பெற்றிருக்கின்றனர் என்பதை அறிந்து கொண்ட பின்பு, கதையில் இருக்கின்ற கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை நடிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருப்பதாலும் நாடகமாக்கல் நிகழ்வில் பங்கேற்காத மற்ற மாணவர்களுக்கு நடிக்க வாய்ப்பளிக்கும் பொருட்டும், கதையின் போக்கையும் கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கையையும் மாற்றி அமைக்கலாமா என்பதான விவாதங்களை மாணவர்களிடம் எழுப்ப வேண்டும். உதாரணமாக,

• இப்பொழுது உங்களில் சிலர் மட்டுமே நடிக்கத் தயாராக இருக்கிறீர்கள், உங்களின் பல நண்பர்களும் இந்த நாடகத்தில் நடிக்க என்ன செய்யலாம்?

• உங்கள் நண்பர்களும் இந்த நாடகத்தில் நடிக்கும் வகையில் நாடகத்தின் கதையை மாற்றலாமா? எப்படி மாற்றலாம்? • என்னென்ன புதிய  கதாப்பாத்திரங்களைச் சேர்க்கலாம்?

• புதிய கதாப்பாத்திரங்கள் என்ன உரையாடலைப் பேசும்?

கதையின் சாரம்சத்தைப் பாதிக்காத வகையில் கதாப்பாத்திரங்களையும் கதை நிகழ்வையும் மாற்றிய பின்னர், மாணவர்களிடம் அவரவர்களுக்குரிய வசனத்தைப் பேசுமாறு கூற வேண்டும், பின்னர் யார் முதலில் பேச வேண்டும், யாரைத் தொடர்ந்து யார் பேச வேண்டும் என்பதான வினாக்களை மாணவர்களிடம் எழுப்ப வேண்டும். மாணவர் பேசிய வசனத்தை அவர்களைக் கொண்டே காகிதத்தில் எழுத வைக்க வேண்டும். (மாணவர்களால் எழுதப்பட்ட இந்தக் குறிப்புகள், மாணவர்கள் தங்கள் வசனத்தை மறக்கும் தருணத்தில், நினைவுபடுத்திக்கொள்ள உதவும்) மாணவர்கள் எழுத்துப்பிழைகளோடு எழுதினாலும் தவறில்லை. மேலும் ஒவ்வொரு குழுவிலும் ஏதேனும் ஒரு மாணவர் உரையாடல் முழுவதையும் ஒழுங்கான முறையில் சரியான வரிசையில் காகிதத்தில் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். இதே செயல்பாடுகளின் மூலம் மற்ற இரண்டு குழுக்களையும் வழிநடத்தலாம்.

 

செயல்பாடு - 3

ஒவ்வொரு குழுவையும் வகுப்பறையின் முன் பகுதியில், நடிக்கச் செய்ய வேண்டும். நடிப்புப் பயிற்சியின் போது ஒவ்வொரு மாணவர்களிடமும் அவர்களுடைய கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற உணர்ச்சிகளையும் சத்தங்களையும் முகபாவங்களையும் வெளிப்படுத்துகிற வகையிலான வினாக்களை எழுப்பிக் கதாப்பாத்திரங்களின் தன்மையை மேம்படுத்த வேண்டும். உதாரணமாக,

• கௌதாரி என்ன செய்யும், எப்படிச் சத்தம் எழுப்பும்? • முயல் எப்படி ஓடும், பூனை எப்படிச் சத்தம் எழுப்பும்?

• தன்னுடைய இருப்பிடத்தை முயல் அபகரித்து கொண்டது என்பதை அறிந்த கௌதாரி என்ன செய்யும்? என்ன முகபாவத்தை வெளிப்படுத்தும் ? எப்படிச்    சத்தம் எழுப்பும்?

• வஞ்சக எண்ணம் கொண்ட பூனை நல்லவன் போல் நடிக்கும் போது எத்தகைய முகபாவங்களை வெளிப்படுத்தும்? • மகிழ்ச்சியில் இருக்கிற கௌதாரி  எப்படி நடந்து கொள்ளும்? எத்தகைய உடல் அசைவுகளை வெளிப்படுத்தும்?

• ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்ந்து கொண்ட முயலும் கௌதாரியும் எத்தகைய முகபாவங்களை வெளிப்படுத்தும்?

செயல்பாடு - 4

மேற்கண்ட செயல்பாடுகள் நிறைவடைந்த பின்னர், சரியான ஒழுங்கமைப்புடன் வகுப்பறையில் நாடகத்தை அரங்கேற்றிய பிறகு, பள்ளி வளாகத்தில் அனைவரின் முன்னிலையிலும் நாடகத்தை அரங்கேற்றம் செய்யலாம்.

வளரும் திறன்கள்

• முகமூடி செய்கிற செயல்பாட்டின் மூலமாக மாணவர்கள் கற்பனைத்திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.

• மாணவர்கள் வசனத்தைத் தங்கு தடையின்றிப் பேச முயல்வதன் வழியே செம்மையான பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.

• சூழ்நிலைக்கு ஏற்ற முகபாவங்கள், உடல் அசைவுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்- கான களமாக இச்செயல்பாடு அமையும்.

• குழுவோடு இணைந்து பணிபுரியும் வாய்ப்- பினைப் பெற முடியும். • மாணவர்கள்வசனத்தைத்தாங்களேஎழுதுவதின் மூலம் எழுதும் திறனை      வளர்த்துக்கொள்ள முடியும்.

• நாடகத்தின் நிகழ்வுகளை மாணவர்களைக் கொண்டே மாற்றியமைப்பதின் மூலம் அவர்களின் கற்பனைத்திறனை வளர்த்தெடுக்க முடியும்.

 

 

Grade: 
3

Subject: 
Tamil

Term: Term 1

0
No votes yet
0
Post a comment