Towards a just, equitable, humane and sustainable society

கதைகேளு! கதைகேளு!

0
No votes yet
0
Post a comment

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவற்றில் முதலிடம் பெறுவது கதைகள். அவை குழந்தைகளைக் கட்டிப்போடும் மந்திரக்கோள்கள். உயிரோட்டமாகக் கதைகூறும் ஆசிரியர்களைப் பிடிக்காத குழந்தைகள் இருக்கவே முடியாது. காலங்காலமாக நம் முன்னோர்கள் நமக்குக் கதைகள் பல கூறி, அவற்றின் வாயிலாக நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வாழ்வியல் முறைகளையும் சூழலையும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர். ஆனால் தற்கால குழந்தைகளுக்கு அத்தகைய வாய்ப்பு வீட்டில் கிடைப்பதில்லை. குழந்தைகளிடம் பல்வேறு திறன்களை வளர்க்கவும் கருத்துக்களைப் பரிமாறவும் நல்ல பண்புகளை வளர்க்கவும் அவர்களுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தவும் அவர்களை முழுமையாகவும் மகிழ்ச்சியுடனும் கற்றலில் ஈடுபடுத்தவும் சிறந்ததோர் உத்தி உண்டெனில், அது கதைகூறலாகத் தானே இருக்கமுடியும்.

தெரிந்த கதை மாந்தர்கள், அழகிய வண்ணப் படங்கள், பெரிய எழுத்துக்கள், ஓரிரு வாக்கியங்கள், சிறிய கதை, எளிமையான தெரிந்த வார்த்தைகள்

இக்கதைகளும் நமக்குப் பிடித்தவைகளாக இருப்பதை விட, நம் குழந்தைகள் விரும்பும் கதைகளாக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா? குழந்தைகளுக்கேற்ற கதைகளைத் தேர்வு செய்வதும் ஒரு கலையே. தெரிந்த கதை மாந்தர்கள், அழகிய வண்ணப் படங்கள், பெரிய எழுத்துக்கள், ஓரிரு வாக்கியங்கள், சிறிய கதை, எளிமையான தெரிந்த வார்த்தைகள், கண்ணைக் கவரும் மேல் அட்டை எனக் கதையைத் தேர்வு செய்யும் போது மனதிற்கொள்ள வேண்டிய கருத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இப்பருவத்தில் குழந்தைகள் விலங்குகளையும் பொம்மைகளையும் நண்பர்களாக நினைத்து விளையாடுவர். எனவே அவைகள் பேசுவது போன்ற கதைகள் அவர்களோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். கேளிச்சித்திரங்களும் கோட்டுச்சித்திரங்களும் அவர்களுக்குப் பிடித்தவை, ஏனெனில், அவற்றைப் பார்த்து வரைவது அவர்களுக்குச் சாத்தியம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன. பெரிய அளவில் வண்ணப் படங்கள் வளர்ந்தவர்களையே கட்டியிழுக்கும் போது குழந்தைகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ? எழுத்துக்களையும் ஓவியமாகப் பார்க்கும் இப்பருவத்தில் பெரிய எழுத்துக்களைக் கொண்ட சிறிய வார்த்தைகள் அவர்களுக்கு வாசித்தலின் பால் ஆர்வத்தை உண்டாக்கும். மேற்கூறியவற்றை மனதிற்கொண்டு தேர்ந்தெடுத்த கதைகள் தான் ‘ஆமையும் குரங்கும் வாழை நட்ட கதை (வகுப்பு 1)’; ‘கஜபதி குலபதி (வகுப்பு 2)’; ‘பண்ணையாரின் பங்கு (வகுப்பு 3)’.

ஆசிரியர் முன்னேற்பாடு: கதைகூறுதல் என்பது எளிமையானதல்ல. இதற்காக ஆசிரியர் திட்டமிட்டு தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். உடலசைவுகள், முகபாவங்கள், குரல் ஏற்றத்தாழ்வு, தேவையான உணர்வுகள் போன்றவைக் கருத்தில் கொண்டு உணர்வுபூர்வமாகக் கதைகூறும் போது குழந்தைகள் தங்களையும் ஒரு கதாபாத்திரமாகக் கற்பனை செய்து கொள்கின்றனர். விலங்குகளின் சத்தம், சர்ர்ர்ர்…, படபட, போன்ற ஒலிகள் குழந்தைகளுக்கு ப் பயமற்ற சூழலை உருவாக்கி அவர்களும் கதைகூறலில் பங்கேற்க வழிவகுக்கும். இவற்றிற்காக ஆசிரியர் பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது.

விலங்குகளின் சத்தம், சர்ர்ர்ர்…, படபட, போன்ற ஒலிகள் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

 

  • கதையை ஆசிரியர் பலமுறை படித்துப் பார்க்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் ஆசிரியர் தங்குதடையில்லாமல் கதைகூறவும், வகுப்பைத் திட்டமிடவும், செயல்பாடுகளுக்கான பொருட்களை முன்கூட்டியே தயார் செய்யவும், உரையாடலுக்கான வினாக்களையும் உதாரணங்களையும் தயாரிக்கவும் பெரிதும் துணைபுரியும்.
  • விலங்குகளின் சத்தங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்; பேசத்தயங்கும் குழந்தைகளைக் கூட முன்வந்து பங்கேற்கச் செய்யும்; கதைக்கு உயிர் கொடுக்கும்.

  •  கதைமாந்தர்களின் முகமூடிகள், கதையில் வரும் பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் படங்களைத் தயார் செய்ய வேண்டும். குழந்தைகள் கதையில் வரும் காட்சிகளைக் காட்சிப்படுத்திப் பார்க்க இவை உதவும். குழந்தைகளின் கவனத்தைக் கதையின் பால் கவர்ந்திழுக்கும். இடையிடையே  கேட்க வேண்டிய கேள்விகளைப் பட்டியலிட வேண்டும். கதையில் மறைந்திருக்கும் தகவல்களைக் கண்டறியவும் அனுமானிக்கவும் அடுத்து வருவதை யூகிக்கவும் தங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தவும் மாணவர்களைத் தூண்டும் வகையில் கேள்விகள் இருத்தல் அவசியம்.

    மாணவர்களைத் தயார்படுத்துதல்: கதை மாந்தர்கள், கதையின் நிகழ்வுகள் கதையில் வரும் காட்சிகள் போன்றவைகளின் படங்களுக்கு வண்ணமிடுதல்; கதையின் முன்னுரையை உரையாடுதல்; கதை மாந்தர்களின் பண்புகள், தோற்றம், எழுப்பும் ஒலி, நடந்து/ பறந்து/ ஊர்ந்து வரும் அல்லது உணவு உண்μம் விதம் போன்றவற் றைச் செய்து விளையா டுதல்; இவற்றின் உருவங்களைக் களிமண், துணி, காகிதம் போன்றவற்றைக் கொண்டு செய்தல்; என ஏதேனும் சிலவற்றைச் செய்து மாணவர்களைக் கதை கேட்டலுக்குத் தயார்செய்யலாம்.

படத்தைக் கொண்டு கதையை ஊகித்தல்: ஆசிரியர் முதலில் கதைப்புத்தகத்தின் மேல் அட்டையைக் காட்டியும் கதையின் தலைப்பைக் கூறியும் குழந்தைகளைக் கதையை ஊகிக்கச் செய்ய வேண்டும். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி, ஒவ்வொரு படத்தையும் காட்டி, தகுந்த வினாக்களை எழுப்பும் போது மாணவர்கள், கதை நிகழ்வுகளையும் கதைமாந்தர்களையும் பற்றிப் பேசுவர்; அப்படங்களை வருணித்து விளக்குவர்; நிகழ்வுகளுக்கான காரணங்களைத் தேட முயல்வர்; அடுத்து என்ன நேர்ந்திருக்கும் என்று ஊக்கிப்பர்; தத்தம் கற்பனைக்கேற்றவாறு கதையைத் தொடருவர். இதன் வாயிலாக ஒவ்வொரு குழந்தையும் தான் கூறியது/ நினைத்தது சரியா அல்லது தவறா என்று உறுதிப்படுத்திக் கொண்டே வரும். இப்போது கற்றல் குழந்தைகளின் பொறுப்பில் இருக்கும்.

கதைகூறல்: ஆசிரியர் கதை மாந்தர்களையும் படங்களையும் அறிமுகம் செய்த பிறகு கதைக்கேற்ற உணர்வுகள், உடலசைவுகள், முகபாவங்கள், குரல் ஏற்றத்தாழ்வு போன்றவைகளுடன் கதையைக் கூறுவார். விலங்குகளின் சத்தங்களும் இதில் அடங்கும். முடிந்தால் கதைக்கேற்ற பாடல் ஒன்றையும் இணைத்துக் கொள்ளலாம்.

தொடர்பயிற்சி: கதைகூறி முடித்த பிறகு மாணவர்களின் புரிதலை வெளிப்படுத்தும் வகையில் சில செயல்பாடுகளைத் திட்டமிடலாம். அவற்றில்

சில, குழந்தைகள் கதையைத் தன் மொழியில் கூறல், கதைவரைபடம் தயாரித்தல், கதைமாந்தரை ஆராய்தல், கதையைப் பற்றி வகுப்புத் தோழிக்குக் கடிதம் எழுதுதல், கதையைப் படமாகவரைதல், கதைச்சுருக்கம் எழுதுதல்…. (list of sample activities attached inTLM kit).

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆமையும் குரங்கும் வாழை நட்ட கதை

(முதலாம் வகுப்பிற்கான பாடத்திட்டம்)

 

கதை: ஆமையும் குரங்கும் நண்பர்கள். ஒருநாள் இருவரும் ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த போது ஆற்றில் ஒரு வாழைமரம் மிதந்து கொண்டு வந்தது. இருவரும் அதனை நட்டு வளர்க்க ஆசைப்பட்டனர். எனவே மரத்தை இரண்டாக வெட்டி மேல் பகுதியை குரங்கும் அடிப்பகுதியை ஆமையும் எடுத்துக் கொண்டன. இருவரும் தத்தம் தோட்டத்தில் நட்டு வளர்த்தனர். குரங்கின் மரம் காய்ந்து விட்டது. ஆமையின் மரம் வளர்ந்து காய்த்தது. ஆமை தன் நண்பன் குரங்கினை அழைத்து பழத்தினை வெட்டி மற்ற விலங்குகளுக்குக் கொடுத்த மீதியைத் தானும் தன் நண்பன் குரங்கும் பங்கிட்டுக் கொண்டனர்.

கதை தேர்வின் அடிப்படை: தெரிந்த கதை மாந்தர்கள், அழகிய வண்ணப் படங்கள், தெரிந்த வார்த்தைகள் மற்றும் ஓரிரு வாக்கியங்கள்.

 கதையை அறிமுகம் செய்தல்: கதையில் வரும் குரங்கு, ஆமை, ஆறு, மான், கிளி, பன்றி, முயல், கரடி, வாழைமரம், ஆந்தை போன்றவற்றின் படங்களின் புள்ளிகளை இணைத்து வண்ணம் தீட்டுதல். களிமண் கொண்டு வாழைப்பழம் செய்து அதைப்பற்றி உரையாடுதல்.

 படத்தைக் கொண்டு கதையை ஊகித்தல்: ஆசிரியர் முதலில் கதைப்புத்தகத்தின் மேல் அட்டையைக் காட்டியும் கதையின் தலைப்பைக் திருப்பி, ஒவ்வொரு படத்தையும் காட்டி, தகுந்த வினாக்களை எழுப்புதல். கீழே சில மாதிரி வினாக்கள். கூறியும் குழந்தைகளைக் கதையை ஊகிக்கச் செய்தல். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி, ஒவ்வொரு படத்தையும் காட்டி, தகுந்த வினாக்களை எழுப்புதல். கீழே சில மாதிரி வினாக்கள்.

           

1.ஆற்றில் எவ்வாறு வாழைமரம் வந்திருக்கும்?

2. வாழைமரத்தைக் குரங்கு ஏன் தலையால

தூக்கல? ஆமை ஏன் கையால தூக்கல?

3. குரங்கு ஏன் மேல்பாகம் தான் வேணும்னு அடம்பிடிச்சது?

4. யாரோட மரம் வளரும்? ஏன்?

5. பழத்தை வெட்ட குரங்கு ஆமைக்கு உதவி செய்யுமா? ஏன்?

ஆசிரியர் கதைகூறல்: ஆசிரியர் கதைக்கேற்ற உணர்வுகள், உடலசைவுகள், முகபாவங்கள், குரல் ஏற்றத்தாழ்வு போன்றவைகளுடன் கதையைக் கூறுவார். குரங்கும் ஆமையும் வாழைமரத்தைப் பார்த்த போதும், மரத்தை இருவரும் வெட்டி பகிர்ந்து கொள்ளும் போதும், நீர் ஊற்றி வளர்க்கும் போதும், பழத்தை வெட்டும் போதும், மற்றவர்களுடன் பகிரும் போதும் இப்பாடலைப் பாடலாம்.

பழம் பழம் வாழைப்பழம்

மஞ்சள் வண்ண வாழைப்பழம்

பச்சை வண்ண வாழைப்பழம்

சிவப்பு வண்ண வாழைப்பழம்

எங்கள் வீட்டுத் தோட்டத்திலே

விளைந்த நல்ல வாழைப்பழம்

சீப்பு சீப்பாய் இருக்குது

சீக்கிரம் வாங்க சாப்பிடலாம்

தொடர்பயிற்சி:

கதைகூறி முடித்த பிறகு மாணவர்களின் புரிதலை வெளிப்படுத்தும் வகையில் சில மாதிரிச் செயல்பாடுகள்.

• குழந்தைகள் கதையைத் தன் மொழியில் கூறல்

• கதையைப் படமாக வரைதல்

• கதையை நடித்துக் காட்டுதல்

• கதைமாந்தர்களைக் கொண்டு வேறு கதையைக் கூறல்

• கதைமாந்தர்களை ஆராய்தல்

 

கதைமாந்தர்களை ஆராய்தல் (மாதிரி விளக்கம்)

• குழந்தைகள் அவரவருக்குப் பிடித்த ஒரு கதைமாந்தரைத் தேர்வு செய்து கொள்வர். அதற்கான காரணத்தைக் கூறுவர்.

• தேர்ந்தெடுத்த கதைமாந்தரிடம் தனக்குப் பிடித்தது மற்றும் பிடிக்காததைப் பற்றிப் பேசுவர். இச்செயல்பாட்டின் வாயிலாக, குழந்தைகளுக்குக் கதை புரிந்ததா? தனக்குப் பிடித்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்க முடிகிறதா? தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைக் கூற முடிகிறதா? போன்ற பல திறன்களை மாணவர்கள் வெளிப்படுத்த முடியும். முதல் வகுப்பு நிலையில் குழந்தைகள் முன்வந்து பேசுவதே போதுமானதாகும். இப்பயிற்சி அவர்கள் அடுத்தடுத்த வகுப்பிற்குச் செல்லும் போது குறிப்பிட்ட ஒரு கதைமாந்தரின் குணநலன்களை அலசி ஆராயும் திறனை வளர்க்க உதவும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கஜபதி குலபதி

(இரண்டாம் வகுப்பிற்கான பாடத்திட்டம்)

கதை: ஊரில் கஜபதி குலபதி என்ற ஒரு யானை இருந்தது. ஒருநாள் வெயில் அதிகமாக இருந்தது. அந்தச் சூட்டைக் கஷபதி குலபதியால் தாங்க முடியவில்லை. அதுபோலவே இருந்தது வாழைப்பழ வியாபாரி, தபால்காரன், பூக்காரி, டீச்சரம்மா ஆகியோருக்கும். புத்திசாலி பாட்டியம்மா எல்லோரையும் குளத்தில் போய் குளிக்கச்சொன்னார். அனைவரும் குளத்தில் குதித்தனர்; சிறுவர்களும் பசுவும் கூட. கடைசியாக கஷபதி குலபதியும் குளத்தில் குதித்தான். குளத்தில் இருந்த அனைவரும் வெளியே பறந்தனர். கஷபதி குலபதி விளையாட குளத்தில் யாருமே இல்லை. புத்திசாலி பாட்டி- யம்மா முதலில் கஜபதி குலபதி குதிக்கட்டும். பின் மற்றவர் குதிக்கலாம் என்றார். அன்று முதல் அப்படியே நடந்தது.

கதை தேர்வின் அடிப்படை: கண்ணைக்கவரும் மேல் அட்டை, நகைச்சுவை, பலவகையான சத்தங்கள், தெரிந்த கதை மாந்தர்கள், குழந்தைகளைக் கவரும் கேளிச்சித்திரங்கள், பெரிய எழுத்துக்கள் மற்றும் தெரிந்த வார்த்தைகள்

கதையை அறிமுகம் செய்தல்: வெயில் அதிகமானால் என்ன செய்வீர்கள் என வினவி மாணவர்களின் அனுபவங்களைப் பகிரச்செய்தல். ஆசிரியரின் குறிப்புகளைக் கேட்டுப் படம் வரைதல் - பானை போன்ற பெரிய வயிறு, தூண்கள் போன்ற நான்கு கால்கள், சிறிய வால், தர்பூசணி போன்ற தலை, முறம் போன்ற இரண்டு காதுகள், கோலிக்குண்டு போன்ற இரு கண்கள், நீண்ட குழல் போன்ற மூக்கு, அதிலிருந்து இரண்டு கொம்புகள். (இறுதியாக மாணவர்கள் அனைவரும் ஒரு யானையை வரைந்திருப்பர்)

                                                                                                                                                            

படத்தைக் கொண்டு கதையை ஊகித்தல்: ஆசிரியர் முதலில் கதைப்புத்தகத்தின் மேல் அட்டையைக் காட்டியும் கதையின் தலைப்பைக் கூறியும் குழந்தைகளைக் கதையை ஊகிக்கச் செய்தல். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி, ஒவ்வொரு படத்தையும் காட்டி, தகுந்த வினாக்களை எழுப்புதல்.

கீழே சில மாதிரி வினாக்கள்.

1. பாட்டியை ஏன் புத்திசாலிப் பாட்டியம்மா என்கிறார்கள்?

2. அனைவரும் ஏன் ‘வேண்டாம்’ என்று கத்தினார்கள்?

3. குளத்தில் யானை குதித்ததும் என்ன நடந்திருக்கும்?

4. யானைக்கு அனைவருடனும் விளையாட ஆசை. என்ன செய்யலாம்?

5. ஒவ்வொருவரும் குதிக்கும் போது வெவ்வேறு சத்தம் கேட்டது ஏன்?

ஆசிரியர் கதைகூறல்: ஆசிரியர் கதைப்பாத்திரங்களின் படங்களை முகமூடிபோல் பயன்படுத்தி ‘தனி நடிப்பு’ (mono acting) மூலம் கதை கூறலாம். அதாவது ஆசிரியர் படங்களையும் குரலையும் மாற்றி மாற்றி யானையாகவும், டீச்சரம்மாவாகவும், பாட்டியாகவும்,ஞ் என நடித்துக் கட்டுவது. தொடர்பயிற்சி: கதைகூறி முடித்த பிறகு மாணவர்களின் புரிதலை வெளிப்படுத்தும் வகையில் சில மாதிரிச் செயல்பாடுகள்.

• குழந்தைகள் கதையைத் தன் மொழியில் கூறல்

• கதைமாந்தர்களைக் கொண்டு வேறு கதையைக் கூறல்

• கதையில் பிடித்த பகுதியைப் படமாக வரைதல்

• கதையை நடித்துக் காட்டுதல்

• கதைமாந்தர்களை ஆராய்தல்

• ‘வாசிப்பு அரங்கம்’ முறையில் கதையை வாசித்தல்

• யார் உன் நண்பர்- கதைமாந்தரை நண்பனாகக் கற்பனை செய்து கதை கூறல்

• வாழ்க்கை வரலாறு (biography) எழுதுதல்

வாழ்க்கை வரலாறு (Biography) பேசுதல் (மாதிரி விளக்கம்)

• குழந்தைகள் கதையில் வரும் ஒரு காட்சி, கதைமாந்தர், பொருட்கள் என ஏதாவது ஒன்றை வரைந்து அதனைப் பற்றி வருணனை செய்து பேசுவர்.

• இச்செயலில் குழந்தைகள் ஈடுபடும் போது பேசத் தயங்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் உதவி செய்ய வேண்டும். அவர்களிடம் கேள்விகளைக் (ரீuவீபீவீஸீரீ ஹீuமீstவீஷீஸீs) கேட்டுப் பேசவைக்க முயல வேண்டும்.

• மாணவர்கள் தங்களின் எண்ணங்களை/ கற்பனைகளைப் பகிரும் போது ஆசிரியர் சரி/ தவறு என்று கூறாமல் இருத்தல் நலம். இது மாணவர்களின் எண்ண ஓட்டங்கள் தடைபடாமல் இருக்க உதவும்.

• அனைத்து குழந்தைகளுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

• இச்செயல்பாடு மாணவர்களின் கற்பனைத் திறனையும் சொற்களஞ்சியத்தையும் பெருக்கும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

யாருடையது இந்தத் தோட்டம்?

(மூன்றாம் வகுப்பிற்கான பாடத்திட்டம்)

 

கதை: குழந்தைகள் இருவர் தோட்டத்தைப் பராமரிப்பதால் தோட்டம் தங்களுடையது என்றனர். சூரியன் வெளிச்சம் தருவதால் தன்னுடையது என்றது. மண்புழு மண்ணைப் புரட்டுவதால் தன்னுடையது என்றது. கிளி செடிகளைத் தின்னும் புழுக்களை உண்பதால் தன்னுடையது என்றது. மகரந்தச்சேர்க்கைக்கு உதவுவதால் பட்டாம்பூச்சி தன்னுடையது என்றது. எலிகளையும் பூச்சிகளையும் தின்று செடிகளைக் காப்பதால் பாம்பு தன்னுடையது என்றது. மேகம் மழை தருவதால் தன்னுடையது என்றது. யாருடையது இந்தத் தோட்டம்?

கதையை அறிமுகம் செய்தல்:

வீட்டு (அ) பள்ளித் தோட்டத்தைப் பற்றி உரையாடுதல்

மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த தோட்டத்தை வரைந்து வண்ணம் தீட்டுதல்

படத்தில் உள்ளவற்றின் பெயரை எழுதுதல் (உ.ம்) செடி, பூ, மண், கல், .....

கதையில் வரும் சூரியன், கிளி, மேகம், புழு, பாம்பு,

                         

கதை தேர்வின் அடிப்படை: அழகிய பெரிய வண்ணப் படங்கள், தெரிந்த கதை மாந்தர்கள், எளிமையான தெரிந்த வார்த்தைகள், கண்ணைக்கவரும் மேல் அட்டை மற்றும் கதையின் மையக்கருத்து

 பட்டாம்பூச்சி போன்றவற்றின் படங்களைக் காட்டி, அவற்றைப் பற்றி பேசச் செய்தல் படத்தைக் கொண்டு கதையை ஊகித்தல்:

மேலே கூறியது போல் ஆசிரியர் முதலில் கதைப்புத்தகத்தின் மேல் அட்டையைக் காட்டியும் கதையின் தலைப்பைக் கூறியும் குழந்தைகளைக் கதையை ஊகிக்கச் செய்தல். படத்தைக் காட்டி உரையாடுவதற்காகச் சில மாதிரி வினாக்கள்.

1. சூரிய வெளிச்சம் இல்லன்னா செடிகள் எல்லாம் என்ன ஆகும்? ஏன்?

2. மண்புழு என்ன பண்ணும்?

3. கிளி பழங்களை எல்லாம் கொத்தித் தின்னும். அதனால தோட்டத்துக்கு என்ன நன்மை?

4. பட்டாம்பூச்சி பூவோட தேனையெல்லாம் குடிச்சிடும். அது எப்படி பூவுக்கு நண்பன்?

5. மேகம் எப்படி தோட்டம் வளர உதவி செய்திருக்கும்?

ஆசிரியர் கதைகூறல்: ஆசிரியர் கதைகூறல்: ஆசிரியர் கதாபாத்திரங்களின் படங்களைக் கொண்டு கதையைப் பொம்மலாட்டமாக நிகழ்த்திக் காட்டுதல். தொட்டத்திற்கு ஒவ்வொருவராக வந்து தனது கருத்தைக் கூறுவது போல் ஆசிரியர் தன் குரலை மாற்றிக் கதை கூறும்போது கதை உயிர்பெறும்.

தொடர்பயிற்சி: மாணவர்களின் புரிதலை வெளிப்படுத்தும் வகையில் சில மாதிரிச் செயல்பாடுகள்.

• கதைச்சுருக்கம் எழுதுதல்

• கதையில் தனக்குப் பிடித்தவற்றைக் கூறி நண்பனுக்குக் கடிதம் எழுதுதல்

• இக்கதையை படக்கதையாக உருவாக்குதல்

• உரையாடலை உன் சொந்த நடையில் கதையாக மாற்றுதல்

• வேறு யாரேனும் இந்தத் தோட்டத்தை சொந்தம் என்று கூறலாமா? யார்/ ஏன் என்று கூறல்

• தோட்டம் பற்றிய பாடல் ஒன்று எழுதுதல். கதை கூறல் முறையில் மாணவர்களிடம் ஊகித்தல், கற்பனை செய்தல், பொருள்புரிதல், தகவல்களைத் தொடர்புபடுத்துதல், காரணம் கண்டறிதல், கேட்டல், ஆராய்தல், வரைதல், உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் போன்ற பல்வேறு திறன்களை வளர்க்க முடியும். குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஏற்ற சூழலை உருவாக்கும்.

குழந்தைகளின் மதிப்புகளை வளர்த்தெடுக்கும் ஏற்ற ஒரு கருவி கதை என்றால் அது மிகையாகாது. இவையனைத்தும் மகிழ்ச்சியான சூழலில் குழந்தைகளின் முழு ஈடுபாட்டுடன் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் நிகழும் என்பதே கதையின் சிறப்பு.

நண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (மாதிரி விளக்கம்) • குழந்தைகள் கதையில் தங்களுக்குப் பிடித்த ஒரு காட்சி, கதைமாந்தர், பொருட்கள் என ஏதாவது ஒன்றை விவரித்து, அது ஏன் தனக்குப் பிடிக்கிறது என்ற காரணத்தையும் இணைத்து தன் நண்பனுக்குக் கடிதம் எழுதுவர். • இச்செயலில் மூலம் குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தவை, பிடிக்காதவை பற்றித் தன் கருத்துக்களை வெளிப்படுத்துவதுடன் அதற்கான காரணத்தைக் கூறும் திறனையும் வளர்த்துக் கொள்வர். • கருத்துக்களும் காரணங்களும் குழந்தைகளுடையது. இதில் சரி/தவறு என்று ஏதும் இல்லை.

Subject: 
Tamil

Term: Term 1

0
No votes yet
0
Post a comment